செவ்வாய் கிரகத்தில்... புதைந்து போன 3 ஏரிகள் கண்டுபிடிப்பு!.. ஆய்வில் வெளியான 'அதிர்ச்சி' தகவல்!.. அப்படினா அங்க உயிர்கள் வாழ்வு சாத்தியமா?
முகப்பு > செய்திகள் > உலகம்செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்திற்கு அருகில் நிலத்துக்கு அடியில் புதைந்து போன மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மெல்லிய வளி மண்டலம் கொண்ட செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நிலையில் நீர் இருப்பது என்பது சாத்தியமற்றது. ஆனால், தரைக்கு கீழே திரவ நிலையில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்கு சொந்தமான 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்ற ஆய்வுக்கலத்தின் ரேடாரில் உள்ள தரவை கொண்டு இந்த மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இதே ஆய்வுக்கலத்தின் ரேடாரை கொண்டுதான், செவ்வாய் கிரகத்தின் தென்துருவத்தின் நிலப்பரப்புக்கு 1.5 கிலோமீட்டர் கீழே சுமார் 20 கிலோமீட்டர் அகலமுள்ள ஏரி இருப்பதற்கான அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்திருந்தனர்.
செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்திற்கு அருகில் நிலத்துக்கு அடியில் புதைந்து போன மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வு ஒன்றின்போது சுட்டிக்காட்டப்பட்ட நான்காவது ஏரி ஒன்று இருப்பதையும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
திரவ நிலையில் நீர் இருப்பு என்பது உயிர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. எனவே, இந்த கண்டுபிடிப்பானது, சூரிய குடும்பத்தில் வேறு எங்கும் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏரிகள் அனைத்தும் மிகவும் உப்புத்தன்மை வாய்ந்தவை என்று கருதப்படுவதால், இது நுண்ணுயிரிகளின் உயிர் வாழ்தல் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
தற்போது செவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்டுள்ள ஏரிகளிலுள்ள பனி உருகுவதற்கு தேவையான வெப்பம் கிடைக்காததால், அங்கு காணப்படும் நீர் உப்புகளின் அதிக செறிவுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.