ஹை ஃபை வாழ்க்கை... கடவுள் வழிபாடு!.. செவ்வாய் கிரகத்தில் 'ஏலியன்ஸ்' செய்த 'சம்பவங்கள்'!.. ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Jul 10, 2020 04:53 PM

செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் வாழ்ந்து உள்ளனர். அவர்கள் அங்கு கடவுள் வழிபாட்டையும் நடத்தி இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

life on mars proof of aliens worshiping technology

வேற்று கிரகவாசிகள் தொடர்பாக பல சினிமா படங்கள் வெளியாகி பிரமிக்க வைத்தது உண்டு. உயிரினங்கள் வாழ்வதற்கு தண்ணீர் அவசியம். எனவே எந்த கிரகங்களில் எல்லாம் தண்ணீர் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஏலியன்ஸ் இருக்கக்கூடும் என்ற கருத்தும் அறிவியல் உலகில் நிலவுகிறது. "செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. நாசாவின் கியூரியாசிடி ரோவரில் பொருத்தப்பட்ட கேமராவால் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் படங்களை பல்வேறு ஆராய்ச்சி குழுவினர் பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.

வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் ஸ்காட் சி வேரிங் என்பவர் செவ்வாய் கிரகத்தில் ஒரு என்ஜினின் பாகம் ஒன்று கிடக்கும் ஆதாரத்தை கண்டுபிடித்ததாகக் கூறி உள்ளார். இந்த என்ஜின், ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்த வேற்றுகிரகவாசிகளுக்கு சொந்தமானதாக இருக்கலாம்  என்றும் கூறி  உள்ளார்.

வேரிங்கின் கூற்றுப்படி, இந்த கருவி வேற்றுகிரகவாசிகள் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் வாழ்ந்து இருக்கலாம் என்பதற்கு சான்றாக மட்டுமல்லாமல், வேற்றுகிரகவாசிகளின் தொழில்நுட்பம் நம்முடையதை விட மிகவும் மேம்பட்டது என்பதையும் காட்டுகிறது. வேற்றுகிரகவாசிகள் உண்மையில் இருக்கிறார்கள் என்பதற்கான சான்றாகும்.

இதுகுறித்து வேரிங் தனது பிளாக்கில் கூறியதாவது:-

புகைப்படத்தில் இன்று செவ்வாய் கிரகத்தின் ஒரு பழங்கால கலைப்பொருளைக் கண்டேன். அது இன்றைய நவீன ஜெட் என்ஜின்களை ஒத்திருக்கிறது. இந்த பொருள் பழையது, நசுங்கியுள்ளது, அதன் மீது நாள்பட்ட தூசி உள்ளது.

ஆனால் அது இப்பகுதியில் உள்ள மற்ற பொருட்களிலிருந்து தெளிவாக மாறுபட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள வேற்றுகிரகவாசிகள் நம்மை விட மிகவும் மேம்பட்ட இயந்திரங்களைக் கொண்டிருந்தன என்பதற்கான சான்று. இவற்றில் கம்பிகளோ குழாய்களோ பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

இவற்றின் கட்டமைப்பில் நேரடியாக மைக்ரோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.அதுபோல் சில செவ்வாய் கிரக புகைப்படங்களைப் ஆராய்ந்துகொண்டிருந்தபோது, ​​ஒரு மலைப்பகுதியின் கீழ் பாகத்தில் மறைந்திருந்த ஒரு விசித்திரமான உருவத்தை நான் கண்டேன். அந்த உருவம் செம்பு அல்லது தங்க உலோகத்தால் ஆனது போல் தெரிகிறது. இதன் வண்ணம் அதன் சுற்றுப்புறத்தின் நிறத்திலிருந்து மிகவும் வித்தியாசமானதாக உள்ளதால், இதை நிச்சயமாக கூற முடியும்.

செவ்வாய்கிரகத்தில் வாழ்ந்தவர்கள் தங்களை பாதுகாக்க வணங்கிய கடவுளின் சிலையாக இது இருக்கலாம். சிலைக்கு ஒரு தலை, அடர்த்தியான மார்பு உள்ளது. அதை உள்ளடக்கிய நீண்ட அங்கி தெரிகிறது. ஒரு புத்தகமோ அல்லது கவசமோ அதன் கையில் உள்ளது. பண்டைய அறிவார்ந்த வேற்றுகிரகவாசிகள் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அங்கு கடவுள் வழிபாடும் நடத்தி உள்ளனர் என்பதற்கான மிக அற்புதமான

ஆதரமாகும் இது" என்று தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Life on mars proof of aliens worshiping technology | World News.