VIDEO : "2 வருஷங்களுக்கு முன்னாடி காணாம போன 'பெண்',.. உயிருடன் கடல்நீரில் மிதந்து கிடந்த 'அதிர்ச்சி'... 'கண்கலங்க' வைக்கும் 'FLASHBACK'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன கொலம்பியாவை சேர்ந்த பெண் ஒருவர், சில தினங்களுக்கு முன் கடல் ஒன்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
ரோலாண்டோ என்கிற மீனவர் மற்றும் அவரது நண்பர் ஒருவர், கடல் நீரில் ஏதோ மரத்துண்டு கிடப்பதாக எண்ணியுள்ள நிலையில், அந்த பெண் கை தூக்கிய போது தான் யாரோ உயிருக்கு போராடுகிறார் என்பதை அறிந்து கொண்டு, படகில் இருந்த இருவரும் அந்த பெண்ணை மீட்டனர்.
கடற்கரையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் மிதந்த பெண்ணை அவர்கள் இருவரும் மீட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ ஒன்று இணையதளங்களில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. மீட்கப்பட்ட அந்த பெண், 46 வயதான ஏஞ்சலிகா கைதன் (Angelica Gaitan) என்பது தெரிய வந்தது. 8 மணி நேரத்திற்கு மேலாக நீரில் மிதந்ததால், அவருக்கு hypothermia மூலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து, அவருக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. தான் காப்பாற்றப்பட்டதும், 'நான் திரும்பவும் பிறந்து விட்டேன். நான் இறக்க வேண்டாம் என கடவுள் விருப்பப்பட்டுள்ளார்' என ஏஞ்சலிகா தெரிவித்துள்ளார்.
அவரது உடல்நலம் சரியானதும், அவரது கடந்த காலம் குறித்து ஏஞ்சலிகா தெரிவித்துள்ளார். தனது திருமணத்திற்கு பின் 20 ஆண்டு காலமாக, தனது முன்னாள் கணவர் கொடுமைப்படுத்தியுள்ளார். தன்னுடைய பிரசவ காலங்களிலும், தன்னை அடித்து துன்புறுத்தியதாக வேதனையுடன் குறிப்பிட்டார்.
இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஏஞ்சலிகாவின் கணவர் அவரை அடித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் என்றும், அதன் காரணமாக தனது வீட்டை விட்டு வெளியேறி, 6 மாத காலம் பல இடங்களில் சுற்றித் திரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அதன் பிறகு மையம் ஒன்றில் தங்கி வந்துள்ள நிலையில், அங்கிருந்து சில தினங்களுக்கு முன் வெளியேறிய ஏஞ்சலிகா தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்து கடலில் குதித்துள்ளார். அதன் பிறகு, அவருக்கு என்ன நடந்தது என்பது அவருக்கே தெரியவில்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து, ஏஞ்சலிகாவின் குடும்பம் தொடர்பான விவரங்களை கண்டுபிடித்து அவரின் மகளிடம் விவரத்தை தெரிவித்தனர். அதன்பிறகு, தனது தாயை சொந்த ஊர் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் மகள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.