அப்பா, அம்மா, தங்கைன்னு.. ஒட்டுமொத்த குடும்பத்தையே அழித்த இளைஞர்.. போலீஸ்கிட்ட அவர் சொன்ன காரணம் தான்!!.. அதிர்ச்சி சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியின் பாலம் என்னும் பகுதியை சேர்ந்தவர் கேசவ் (வயது 25). இவர் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
![Delhi palam murder case youth accused who slayed entire family Delhi palam murder case youth accused who slayed entire family](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/delhi-palam-murder-case-youth-accused-who-slayed-entire-family.jpg)
இதனைத் தொடர்ந்து, மறுவாழ்வு மையம் ஒன்றிலும் இதற்காக சிகிச்சை பெற்று வந்த கேசவ், சமீபத்தில் மீண்டும் வீடு திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெற்றோர், பாட்டி, சகோதரி உள்ளிட்டோருடன் வசித்து வந்த கேசவ், அடிக்கடி குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதே போல, வேலைக்கு செல்லாமலும் வீட்டிலேயே அவர் இருந்து வந்ததால், குடும்பத்தினரும் இதனை கண்டித்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இதனிடையே, மது அருந்தவும் பணம் கேட்டு குடும்பத்தினரிடம் கேசவ் சண்டை போட்டும் வந்ததாக தெரிகிறது.
ஆனால், கேசவ் குடும்பத்தினர் யாரும் பணம் கொடுக்க மறுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் அவர்கள் மீது ஆத்திரத்தில் இருந்த கேசவ், தனது தந்தை தினேஷ், தாய் தர்சன் சைனி, தங்கை ஊர்வசி மற்றும் பாட்டி தேவானா தேவி ஆகிய நான்கு பேரையும் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இவரது வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வேகமாக வந்து பார்த்துள்ளனர். அப்போது அங்கே, கேசவின் குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ந்து போயுள்ளனர். இதன் பின்னர், குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்து விட்டு தப்பியோட முயன்ற கேசவையும் அவர்கள் மடக்கி பிடித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, அவரை போலீசிலும் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், போதையில் இருந்த கேசவ், மேலும் மது வாங்க குடும்பத்தினரிடம் பணம் கேட்டதாகவும், ஆனால் அவர்கள் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அதே போல, வேலை எதுவும் செய்யாமல் அவர் இருந்து வந்ததையும் கண்டிக்க கோபத்தில் அனைவரையும் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, நான்கு பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தனது குடும்பத்தினர் நான்கு பேரை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | கல்யாணமாகி 10-வது நாள்.. மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த மணமகள்.. கோபத்தில் பெண்வீட்டார் செஞ்ச பகீர் காரியம்...!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)