அந்த மனசுதான் சார்.!! தெருநாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து நெகிழ வச்ச நபர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Nov 23, 2022 04:45 PM

வீடற்ற நபர் ஒருவர் தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்த புகைப்படம் பலரையும் நெகிழ செய்திருக்கிறது. இந்நிலையில், இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Homeless man shares his tiny mattress with seven stray dogs

Also Read | ஒரே எரிமலை 16,000 ஹிரோஷிமா குண்டுகளுக்கு சமமா..?? உலகையே அச்சுறுத்தும் தம்போரா எரிமலையின் திகில் பின்னணி..!

இணையத்தின் வளர்ச்சியால் சமூக வலை தளங்களின் வீச்சு தற்போது அதிகரித்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். எளிதில் கவனத்தை ஈர்க்கும் விஷயங்கள் சமூக வலை தளங்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் வைரலாகி விடுவது உண்டு. குறிப்பாக மக்களின் மனதை கவரும் சம்பவங்கள் இணையத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற தவறுவதில்லை. அப்படியான சம்பவம் தான் சமீபத்தில் நடந்திருக்கிறது.

இந்திய வனத் துறை அதிகாரியான சுசாந்தா நந்தா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இயங்கக் கூடியவர். வன விலங்குகள், காடுகள் குறித்த தகவல்கள், தன்னம்பிக்கை அளிக்கும் வீடியோக்கள் என பலவற்றை இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது புகைப்படம் ஒன்றை நந்தா பகிர்ந்திருக்கிறார். அதில், ஒரு கடையின் வாசலில் ஒருவர் படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறார்.

அந்த விரிப்பில் தெரு நாய்களும் அவரருகே படுத்திருக்கின்றன. சிறிய விரிப்பில் நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்த நபரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த புகைப்படம் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இந்நிலையில், இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள சுசாந்தா நந்தா,"இந்த பெரிய உலகத்திற்கு இடமளிக்கும் அளவுக்கு நம் இதயமும் பெரியதாக இருக்க வேண்டும்" என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் இதுகுறித்த தங்களது எண்ணங்களை கமெண்டாக பதிவு செய்து வருகின்றனர். ஒருவர் இந்த பதிவில்,"24 கேரட் தங்கமான மனது இவருக்கு" எனவும் "வீடு இருப்பவர்களே செய்ய நினைக்காததை இந்த மனிதர் செய்து அனைவர்க்கும் எடுத்துக்காட்டாக மாறியிருக்கிறார்" எனவும் கமெண்ட் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

 

Also Read | கல்யாணமாகி 10-வது நாள்.. மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த மணமகள்.. கோபத்தில் பெண்வீட்டார் செஞ்ச பகீர் காரியம்...!

Tags : #HOMELESS MAN #TINY MATTRESS #SHARE #DOGS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Homeless man shares his tiny mattress with seven stray dogs | India News.