கல்யாணத்துக்கு மறுத்த காதலி.. வீட்டுக்கே போய் இளைஞர் செஞ்ச காரியம்.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த அடுத்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலியை கொலை செய்ததாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த இளைஞர் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | "டாக்டர். இளையராஜா..".. இசைஞானிக்கு பட்டம் வழங்கிய பிரதமர் மோடி.! உடனிருந்த முதல்வர் ஸ்டாலின்..!
மகாராஷ்டிரா மாநிலம், புனேவின் சித்தார்த் நகரை சேர்ந்த 26 வயதான பெண் ஒருவருக்கு அருகில் உள்ள ராஜ்குரு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து இருவரும் தொடர்ந்து பழகிவந்த நிலையில் இருவரிடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் இளைஞர் திருமணம் செய்துகொள்வது பற்றி இளம்பெண்ணிடம் பேசியிருக்கிறார்.
அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்ததாகவும் தான் வெளிநாட்டுக்கு சென்று படிக்க இருப்பதாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், இளைஞர் தொடர்ந்து பெண்ணை தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. இப்படி இருக்க, நேற்று முன்தினம் இளம்பெண்ணின் வீட்டுக்கு இளைஞர் சென்றிருக்கிறார்.
அப்போது, தனது அம்மாவுடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய இளம்பெண்ணிடம் திருமணம் குறித்து மீண்டும் இளைஞர் பேசியதாக கூறப்படுகிறது. கொஞ்ச நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, கோபமடைந்த இளைஞர் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து, இளம்பெண்ணின் வீட்டார் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதனால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். இதனையடுத்து, இளைஞர் மீது காவல்துறையில் இளம்பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்திருக்கின்றனர்.
இதனிடையே, சதுஷ்ருங்கி காவல்நிலையத்திற்கு ஒரு தகவல் வந்திருக்கிறது. அதில், அடையாளம் தெரியாத நபர் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணையில் இறங்கியுள்ளனர். அதன் பலனாக, இளம்பெண்ணை கொலை செய்ததாக சொல்லப்பட்ட இளைஞர் பின்னர் தனது உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து சதுஷ்ருங்கி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.