ஏகிற வைத்த இணைய பில்?.. வாலிபர் எடுத்த அதிரடி முடிவு.. மிரண்டு போய் அரசு கொடுத்த 20 கோடி ரூபாய் நிதி உதவி!! பின்னணி என்ன??

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Aug 16, 2022 12:34 AM

இன்று பல இடங்களிலும் இணையத்தின் சேவை என்பது அதிமாகி கொண்டு தான் இருக்கிறது. இதன் காரணமாக, பல வீடுகளிலும் சிறந்த நெட்வொர்க் சேவையின் மூலம், இணையத்தை பயன்படுத்தியும் வருகின்றனர்.

man who build own internet network to avoid paying extra bills

இதில் சில இடங்களை பொறுத்து, இணைய சேவை என்பது சற்று ஸ்லோவாக கூட இருக்க வாய்ப்புள்ளது. அப்படி இருக்கும் நிலையில், பணிகளில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு இணையதளத்தை பயன்படுத்தும் போது நிறைய சிரமம் கூட ஏற்படலாம்.

அந்த வகையில், US பகுதியை அடுத்த மிச்சிகன் என்னும் இடத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு, மோசமான இணைய சேவை இருந்து வந்ததால், அவர் செய்த காரியம் ஒன்று, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Jared Mauch என்ற நபர், Michigan பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு, இந்த பகுதியில் குடிபெயர்ந்த நிலையில், சீனியர் நெட்வொர்க் ஆர்கிடெக்ட் ஆகவும் பணிபுரிந்து வந்துள்ளார். ஆரம்பத்தில், 1.5 Mbps வேகத்தில் இணைய சேவையை பயன்படுத்தி வந்த Jared, அதன் பின்னர் வயர்லெஸ் இணைய சேவைக்கும் மாறி உள்ளதாக கூறப்படுகிறது. Jared வசிக்கும் பகுதி கிராமப்புறம் என்பதால், அவரது பகுதியில் இணையத்தின் வேகம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

man who build own internet network to avoid paying extra bills

இதற்காக, சம்மந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு அதன் வேகத்தை அதிகரிக்க Jared Mauch முயற்சி மேற்கொண்ட நிலையில், அவரது பகுதிக்கு வேகமான இணைய சேவையை கொடுக்க முடியாது என்றும், இதற்காக இணைப்பை நீட்டிக்க வேண்டுமானால், 50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம் ரூபாய்) வரை செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த Jared, அதிரடி முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார்.

மற்றவர்கள் இணையத்தை தான் ஏன் பயன்படுத்த வேண்டும் என சொந்தமாக ISP (Internet Service Provider) ஒன்றையும் Jared உருவாக்கத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் இதனை தனக்காக மட்டுமே Jared தொடங்கிய நிலையில், பின்னர் இந்த இணையதள சேவையை தற்போது, அவரது பகுதியில் உள்ள சுமார் 70 குடும்பங்கள் வரை பயன்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்காக ஏராளமான பணமும் அவர் செலவு செய்துள்ளார்.

அது மட்டுமில்லாமல், சுமார் இரண்டரை மில்லியன்களுக்கு மேல், அரசும் நிதி உதவி செய்து, இன்னும் 1000 வீடுகளுக்கு Jared உருவாக்கிய இணைய சேவையை கொடுக்கவும் முன் வந்துள்ளது. தனது இணைய சேவையை பயன்படுத்த ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கி வருகிறார் Jared Mauch.

man who build own internet network to avoid paying extra bills

இணைய சேவை குறைவாக இருந்ததால், சொந்தமாக நிறுவனம் ஒன்றை வாலிபர் தொடங்கியுள்ள நிலையில், அதற்கு அரசும் உதவியுள்ள சம்பவம், வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #BROADBAND #INTERNET #FIBRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man who build own internet network to avoid paying extra bills | World News.