'தர்பூசணியை வைத்து செயற்கை மார்பகம்'... 'டிக்டாக் பிரபலத்துக்கு வந்த ஆசை'... 'ஆனா எதிர்பாக்காமல் நடந்த ட்விஸ்ட்'... வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்கர்ப்பிணிப் பெண் போல ஒருநாள் வாழ வேண்டும் என்ற ஆசை டிக்டாக் பிரபலத்துக்கு வந்தது.
ஒரு பெண் கர்ப்பமாகி, தனது பேறு காலத்தில் அடியெடுத்து வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு ஆகும். ஆனால் பேறு கால மாதங்களில் பெண்கள் கடுமையான சிரமங்களையும் அனுபவிப்பார்கள். பேறு காலத்தில் பெண்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படும். இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். பல பெண்கள் அதிக எடை கூடுவார்கள்.
பேறு காலத்தின் 9 ஆவது மாதத்தில் சாதாரண வேலைகளைக் கூடச் செய்ய முடியாமல் சிரமங்களை அனுபவிப்பார்கள். உடல் அளவில் இவ்வளவு வலிகள் என்றால் மனதளவில் இன்னும் அதிக இன்னல்களையும் சந்திப்பார்கள். அந்தவகையில் பெண்கள் படும் துயரங்களை ஆழ்ந்து யோசித்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் மெயிட்லாண்ட் ஹான்லே ஒரு நாள் கர்ப்பிணியாக வாழ ஆசைப்பட்டுள்ளார்.
அதுவும் 9 மாத கர்ப்பிணியாக அவர் வாழ விருப்பப்பட்டுள்ளார். இதற்காக ஒரு பெரிய தர்பூசிணியை தன் வயிற்றில் இருக்கமாகக் கட்டிக்கொண்டார். பேறு காலங்களில் பெண்களுக்கு மார்பகங்களும் பெரிதாகும் என்பதால் சிறிய தர்ப்பூசிணி பழங்களையும் தன்னுடைய நெஞ்சில் வைத்து பிளாஸ்டிக் பிளாஸ்திரிகளால் இருக்கமாகக் கட்டி விட்டார்.
பின்பு கர்ப்பிணிகளைப் போல தன்னைத்தானே பாவித்துக்கொண்ட ஹான்லே படுக்கையில் படுத்துக்கொண்டார். அதன் பின்பு படுக்கையிலிருந்து எழுந்திருக்க அவர் முயன்றபோதும் அவரால் முடியவில்லை. உண்மையிலேயே கர்ப்பிணியாக இருப்பது மிகவும் சிரமம்தான் என்று வீடியோவில் தெரிவித்துள்ளார் ஹான்லே