‘ஏற்கனவே ஒருதடவை கரு கலஞ்சிருச்சு’!.. ‘இது நக்சலைட் அதிகமா இருக்கிற இடம்’.. பெண் கமெண்டோ சொன்ன மாஸ் பதில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியா8 மாத கர்ப்பிணிப்பெண் ஒருவர் நக்சலைட்டுகள் இருக்கும் ஆபத்தான பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக அப்பகுதியில் மாநில போலீசார் மற்றும் ரிசர்வ்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 8 மாத கர்ப்பிணியான சுனைனா படேல் என்ற பெண் கமெண்டோ அங்கு பணியாற்றி வருகிறார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘நான் பணியில் சேரும்போது 2 மாத கர்ப்பிணியாக இருந்தேன். என் கடமையை செய்ய ஒருபோதும் தவறியதில்லை. இன்றும் பணி என்று வந்துவிட்டால் முழுமனதோடு ஈடுபடுவேன்’ என தெரிவித்துள்ளார். சுனைனா படேல் குறித்து தெரிவித்த தண்டேவாடா எஸ்.பி அபிஷேக் பல்லவ் கூறுகையில், ‘ஒரு தடவை ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுனைனாவுக்கு கர்ப்பம் கலைந்துவிட்டது. ஆனாலும் பணியில் இருந்து செல்வதற்கும் இன்றும் மறுப்பு தெரிவித்து, பல பெண்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்’ என தெரிவித்துள்ளார்.
Sunaina Patel, 8-month-old pregnant woman deployed as Danteshwari fighter in District Reserve Guard to combat Naxals in Chhattisgarh's Dantewada: I was 2-months pregnant when I joined. I never refused to perform my duties. Today also if I'm asked I'll do it with utmost sincerity. pic.twitter.com/6tUOruZsbz
— ANI (@ANI) March 8, 2020