'சாவகாசமாக சிமெண்ட் மூட்டையை தூக்கி கொண்டிருந்த இளைஞர்'... 'கேமராவில் சிக்கிய திடுக் காட்சி'... அடிவயிற்றில் புளியை கரைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Jan 29, 2021 02:08 PM

டிக் டாக்கில் பிரபலமான ரோபர்டோ என்பவர் வெளியிட்டுள்ள டிக் டாக் வீடியோ ஒன்று, நெட்டிசன்களிடையே அதிகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

man terrifies tiktok viewers with haunting video of ghost

கலிபோர்னியாவைச் சேர்ந்த ரோபர்டோ என்பவர் ஒரு டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். எனது சகோதரர் இந்த வீட்டில் தான் இறந்துள்ளார் என அந்த வீடியோவில் ரோபர்டோ குறிப்பிட்டுள்ள நிலையில், அங்கே நிற்கும் சில்வர் நிற கார் பின்னால் பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியது போலவே, வீடியோவில் ரோபர்டோ டிரக் ஒன்றில் இருந்து சிமெண்ட் மூட்டையைத் தூக்கும் போது, அவரின் அருகே நிற்கும் சில்வர் நிற காரின் பக்கத்தில் கருப்பு உருவம் ஒன்று தோன்றி மறைகிறது.

அது தனது சகோதரரின் ஆவியாக இருக்கலாம் என கருதும் ரோபர்டோ, இந்த வீட்டில் வைத்து தான் அவரது சகோதரர் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார். தற்போதும் அந்த பகுதியையே சகோதரரின் ஆவி சுற்றி வருவதாக அவர் கருதும் நிலையில், ரோபர்டோவின் தங்கை எடுத்த வீடியோவில், கார் கண்ணாடியில் ஒரு உருவமும், முகம் பார்க்கும் கண்ணாடியில் அவரது சகோதரரின் முகம் போன்ற உருவமும் தெரிவதாக ரோபர்டோவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த டிக் டாக் வீடியோ அதிகம் வைரலான நிலையில், அதனை பார்த்து அதிர்ந்து போன நெட்டிசன்கள், உடனடியாக அந்த வீட்டை காலி செய்யுங்கள் என ரோபர்டோவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man terrifies tiktok viewers with haunting video of ghost | World News.