"உலகமே இத படிக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு".. ராணிக்கு கடைசியா எழுதுன கடிதம்.. அரச குடும்பத்தில் குழப்பத்த கிளப்பிய நபர்!!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டன் ராணி எலிசபெத் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு, உடல்நலக் குறைவு காரணமாக, தனது 96 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
Also Read | ராகுலை பாத்ததும்.. திடீர்ன்னு சிறுமி செஞ்ச விஷயம்.. கூட்டத்துக்கு மத்தியில் நடந்த சம்பவம்!!
70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த ராணி எலிசபெத், அரச முறைப்படி பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்ட பின்னர், கடந்த 19 ஆம் தேதியன்று நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது.
அவ்வப்போது ராணி எலிசபெத் மற்றும் அரச குடும்பம் தொடர்பான பல அரிய தகவல்கள் இணையத்தில் அதிகம் வலம் வந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், தற்போது ஒருவர் வெளியிட்டுள்ள கடிதமும் அதற்கு அவர் சொல்லும் காரணமும் இணையத்தில் பெரும் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது. தற்போதைய மன்னர் சார்ல்ஸுக்கு பிறந்த நபர் என தன்னை அடையாளம் தெரிவிக்கும் நிலையில், அவர் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் பகுதியை சேர்ந்தவர் சைமன் டொரண்டே டே. தற்போது இவருக்கு 56 வயதாகிறது. இவர் தன்னை சார்லஸுக்கு பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதன்படி, தனது வளர்ப்பு பாட்டி மரணப்படுக்கையில் இருந்த போது தன்னிடம் இந்த விஷயத்தை கூறியதாக சைமன் குறிப்பிடுகிறார். ஆனால், இதுகுறித்து சார்லஸ் எதுவும் பேசவில்லை என்றும் சைமன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, ராணி எலிசபெத்துக்கு கடைசியாக தான் எழுதிய கடிதம் குறித்த தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
தன்னுடைய விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டதாக சைமன் தெரிவிக்கிறார். மேலும் கடிதத்தில் எழுதி இருந்த தகவலை இதுவரை வெளிப்படுத்தாமல் இருந்த சைமன் தற்போது இதனை உலகம் படிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த கடிதத்தினை அவர் எழுதியதாக சைமன் தெரிவிக்கும் நிலையில், இதற்கு எந்த ஒரு பதிலை அளிப்பதற்கு முன்பு ராணி உயிரிழந்து விட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தனக்கு பலத்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் உண்டு பண்ணியதாக சைமன் குறிப்பிடும் நிலையில், தன் உடல் பாகங்களில் சிறு வயதில் செய்த சில மாற்றங்களையும் தெரிவித்து தனது அடையாளத்தை மறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்றும் அவர் கூறுகிறார்.
தன்னை வளர்த்த பாட்டி தான், சார்லஸ் மகன் நான் என கூறியதும், எனது குடும்பத்தின் சார்பாக இதை எழுதுகிறேன் என்றும், சிக்கலை தீர்ப்பதற்கு உங்கள் உதவி கேட்கிறேன் என்றும் ராணிக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமில்லாமல், சார்லஸை நேரடியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளது தான் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.