எல்லோரும் அவரை நோட் பண்ணிருக்காங்க.. ராணியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட உயரமான நபர்.. ஆத்தாடி அவரா இது..?
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து ராணியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட உயரமான நபர் குறித்து தான் இணையம் முழுவதும் பேச்சாக இருக்கிறது. இறுதியில் அவர்குறித்த தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
இங்கிலாந்து ராணி
பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டாம் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்த பெருமை இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. அவருடைய ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். நெடுநாள் ராணியாக பதிவி வகித்த அவர் கடந்த 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ராணியின் உடல் ஒருவாரம் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் ராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் அபேவிற்கு ராஜ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே உலக தலைவர்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டுசெல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது.
உயரமான நபர்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ராஜ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்ட போது, இங்கிலாந்து அரச குடும்ப உறுப்பினர்கள், நாட்டின் உயர் அதிகாரிகள், ராணியின் பணியாளர்கள் ஆகியோர் அதனை தொடர்ந்து நடந்து சென்றனர். இதில் உயரமாக இருந்த நபர் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். மவுனமாக அவர் நடந்து வரும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. இந்நிலையில், கருப்பு சூட்டுடன் நின்றிருந்த அவர் யார்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
மேத்தீவ் மேகி
இந்நிலையில், அவர் யார் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அவர் மறைந்த ராணியின் முன்னாள் உதவித் தனிச் செயலாளரான மேத்யூ மேகி ஆவார். 7 அடி 2 அங்குல உயரம் கொண்ட அவர் 2018 இல் பதவியில் அமர்த்தப்பட்டார். இதற்கு முன் மேகி கென்ட் டியூக் இளவரசர் எட்வர்டின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரச குடும்ப ஊழியர்களில் மிக உயரமான நபர்களில் மேகியும் ஒருவர். அரச குடும்ப உறுப்பினரான டால் பால்-ஐ விடவும் மேகி உயரமானவர் ஆவார்.
Also Read | "அவன் மீண்டு வரணும்..அதுபோதும்".. மகனுடைய சிகிச்சைக்காக தந்தை எடுத்த நெகிழ வைக்கும் முடிவு..!