"இத எப்படியா நான் பறக்க விடுறது??".. ஆர்டர் செஞ்சது ட்ரோன் கேமரா.. "ஆனா பார்சல்'ல வந்தத வெச்சு FRY வேணா பண்ணலாம்"!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பழக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன.
Also Read | "எது, சுவத்துல இருந்து ரத்தம் கசியுதா?".. இளம்பெண் பகிரந்த வீடியோவால்.. பரபரப்பான இணையம்!
நேரடியாக கடைகளுக்கு சென்று பொருட்களை தேர்ந்தெடுத்து அதனை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவதற்கு பதிலாக, ஆன்லைனில் பொறுமையாக தங்களுக்கு தேவையான பொருளைத் தேடி அது பற்றிய விவரங்களை அறிந்து அதனை ஆர்டர் செய்கின்றனர்.
அடுத்த சில தினங்களில், இந்த பொருட்களும் வந்தடையும் என்பதால், மக்கள் பலருக்கும் இந்த ஆன்லைன் ஆர்டர் முறை, மிகவும் வசதியான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே வேளையில் ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்யும் போது சில குழப்பங்களும் நேராமல் இல்லை. அந்த வகையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், ஆன்லைன் மூலம் பொருள் ஒன்றை ஆர்டர் செய்துள்ள நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் நளந்தா என்னும் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனம் மூலம் ட்ரோன் கேமரா ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். தொடர்ந்து குறிப்பிட தேதியில் அந்த பார்சலும் அவரை தேடி வந்து சேர்ந்துள்ளது. ட்ரோன் கேமராவுக்கும், வந்த பார்சலுக்கும் சற்று வித்தியாசம் தெரிந்ததால் சந்தேகம் அடைந்த அந்த வாலிபர், பார்சல் கொண்டு வந்த ஊழியரிடமே அதனை திறக்க சொல்லி வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
அந்த சமயத்தில் பார்சலுக்குள் ட்ரோன் கேமரா இருக்க வேண்டிய இடத்தில், சுமார் 10 முதல் 20 உருளைக்கிழங்குகள் இருந்துள்ளது. இதனைக் கண்டதும் அந்த வாலிபர் ஒரு நிமிடம் ஆடிப் போனார். முன்னதாக இந்த இளைஞர் ட்ரோன் கேமராவுக்கான தொகையை முன்கூட்டியே செலுத்தி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில் தற்போது ட்ரோன் கேமரா இருக்க வேண்டிய பார்சலில் உருளைக்கிழங்கு இருந்தது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் மூலம் ட்ரோன் கேமரா ஆர்டர் செய்திருந்த நிலையில், அந்த பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள பொம்மை கார் வந்திருந்த செய்தியும் அதிகம் இணையத்தில் வைரலாக பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.