ஒரே ஒரு விஷயத்தில்.. ராணி எலிசபெத்தை OVERTAKE செய்த இளவரசி டயானா.. இணையத்தில் வைரலாகும் தகவல்!!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், ராஜ மரியாதையுடன் கடந்த 19 ஆம் தேதியன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் அரச குடும்பத்தை சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு ராணிக்கு பிரியாவிடை அளித்தனர்.
Also Read | சோர்வாக அமர்ந்தபடி.. வயசான மனுஷன் செஞ்ச விஷயம்.. "நெட்டிசன்கள் மனதை உடைத்த வீடியோ!!
கடந்த 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த ராணி எலிசபெத், செப்டம்பர் 8 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, அரசு மரியாதை படி ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், ராணியின் உடலுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டு செல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது.
விண்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரச வழக்கப்படி அவருடைய கணவரின் கல்லறை அருகே எலிசபெத்தின் சவப்பெட்டி புதைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மிக மூத்த அதிகாரியான லார்ட் சேம்பர்லெய்ன், அரச குடும்பத்தினர் அலுவலகத்தின் மந்திரக்கோல் என்று அழைக்கப்படும் ஒரு தடியை உடைத்து ராணியின் சவப்பெட்டி மீது வைத்தார்.
இந்நிலையில், ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு தொலைக்காட்சியில் பார்க்கப்பட்டது தொடர்பான புள்ளி விவரங்கள் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பகுதியில் ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் எண்ணிக்கை என்பது, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த இளவரசி டயானாவின் இறுதிச் சடங்கை பார்த்தவர்களை விட குறைவு என தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது தொடர்பான புள்ளி விவரங்களை பிரிட்டனின் Broadcasters Audience Research Board வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன் படி, அமெரிக்காவில் ராணியின் இறுதிச் சடங்கு நிகழ்வு, சுமார் 11.4 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதே வேளையில், கடந்த 1997 ஆம் ஆண்டு உயிரிழந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் இறுதிச் சடங்கை அமெரிக்காவில் 33.2 மில்லியன் பேர் தொலைக்காட்சியில் பார்த்ததாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
மேலும், பிரிட்டனில் இளவரசி டயானாவின் இறுதிச் சடங்கு நிகழ்வு 32 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்த நிலையில், தற்போது ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு நிகழ்வு தொலைக்காட்சியில் 27 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதில், மற்றொரு ஆச்சரிய தகவல் என்னவென்றால், இளவரசர் ஹாரி மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோரின் திருமணங்களுக்கு கிடைத்த பார்வையாளர்கள், அவரது பாட்டியான ராணி எலிசபெத் மரணத்தை தொலைக்காட்சியில் பார்த்தவர்களை விட அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.