அன்னைக்கி ராணி சோகமா இருந்த அதே இடத்தில் மன்னர் சார்லஸ்.. "இந்த இடத்துக்கு பின்னாடி இப்டி ஒரு ஹைலைட் வேற இருக்கா?"
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ராஜ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் அரச குடும்பத்தை சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு ராணிக்கு பிரியாவிடை அளித்தனர்.

கடந்த 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த ராணி எலிசபெத், செப்டம்பர் 8 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, இத்தனை நாட்கள் அரசு மரியாதை படி, ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், ராணியின் உடலுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டு செல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது.
விண்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரச வழக்கப்படி அவருடைய கணவரின் கல்லறை அருகே எலிசபெத்தின் சவப்பெட்டி புதைக்கப்பட்டது. இந்நிலையில், ராணி எலிசபெத் இறுதி சடங்கின் போது மன்னர் சார்லஸ் அமர்ந்திருக்கும் இடம் தொடர்பான செய்தி குறித்த தகவல், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
ராணி எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப், கடந்த 17 மாதங்களுக்கு முன் மறைந்த போது, விண்ட்சரிலுள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில், தனியாக ஒரு இடத்தில் மிகவும் சோகமாக அமர்ந்திருந்தார் ராணி எலிசபெத். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தனியாக இருக்கும் சூழ்நிலை ராணிக்கு உருவாகி இருந்தது. தற்போது அதே தேவாலயத்தில், ராணி எலிசபெத் இறுதிச் சடங்கின் போது தனது மனைவி மற்றும் சகோதரியுடன் மன்னர் சார்லஸ் அதே இடத்தில் அமர்ந்திருந்தார்.
இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், பிரிட்டனை ஆட்சி செய்யும் மன்னர் மற்றும் மகாராணி ஆகியோர் தேவாலயத்தில் அந்த இடத்தில் தான் அமர வேண்டும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னதாக, கடந்த 500 ஆண்டுகளுக்கு முன், இதே இடத்தில் அமர்ந்து தான் மன்னர் எட்டாம் ஹென்றி தேவாலய ஆராதனையில் பங்கேற்று வந்தார் என்றும் ஒரு தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படிப்பட்ட இடத்தில் கடந்த 17 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ராணி எலிசபெத் மற்றும் தற்போதைய மன்னர் சார்லஸ் இருக்கும் புகைப்படங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மற்ற செய்திகள்
