“அங்க நடந்த மாதிரி இங்கயும்.. மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு ப்ளான் பண்ணேன்!”... ஷாக் கொடுத்த பெண்!
முகப்பு > செய்திகள் > உலகம்சிங்கள தேவாலயத்தில் நடந்தது போல், வெடிகுண்டு தாக்குதலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்த பிரிட்டன் பெண் வசமாக சிக்கியுள்ளர்.

பிரிட்டனில் உள்ள புனித பவுல் தேவாலயத்தை, இலங்கையில் ஈஸ்டர் அன்று நடந்தது போலவே வெடிகுண்டு, தற்கொலை தாக்குதலை செய்து அழிக்க திட்டமிட்டிருந்துள்ளார் 36 வயதான சபியா ஷாயிக். இலங்கை தேவாலயத்தில் ஈஸ்டர் அன்று சில வருடங்களுக்கு முன் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அதே பாணியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பிரிட்டனில் 2 இடங்களில் பண்ண வேண்டும் என்பது சபியாவின் திட்டம். ஆனால் போதைக்கு அடிமையான சபியா, ஆன்லைனில் வெடிகுண்டு ஆர்டர் செய்தபோது அதை கொண்டு வந்து கொடுத்ததே போலீஸ்தான் என்பதை அறிந்திருக்கவில்லை. வசமாக சிக்கிக் கொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட இவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு லண்டனில் பிறந்து பின்னர் இஸ்லாத்தைத் தழுவிய சபியா, சிறைக்கு கொண்டு செல்லப்படும்போது, தனக்கு சல்யூட் அடித்த ஐ.எஸ் அமைப்பினருக்கு பதிலுக்கு தனது சுட்டு விரலைக் காண்பித்து புன்னகையை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
