VIDEO: 'பாசப் போராட்டம்' நடத்தி... பிரிந்த காதலியுடன் மீண்டும் இணைந்த காளை!.. 'மஞ்சமலை-லக்ஷ்மி'யின் கியூட் 'குட்டி' லவ் ஸ்டோரி! - நெகிழ வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை பாலமேடு பகுதியில் பசுமாட்டை விட்டு பிரிய மறுத்து காளை மாடு பாசப் போராட்டம் நடத்தி காதலில் வெற்றி கண்டுள்ளது.

மதுரை பாலமேடு பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் பசு மாடு வளர்த்து வந்தார். இந்த நிலையில் பாலமேடு மஞ்சமலை கோவில் காளையும் அவ்வழியே செல்லும் போது முனியாண்டியின் பசு மாடுடன் சேர்ந்து பழம், காய்கறிகள், தண்ணீர், அரிசி போன்றவற்றை சாப்பிட்டு வந்தது. ஊரடங்கால் வருமானமின்றி தவித்த முனியாண்டி தனது பசு மாட்டினை விற்பனை செய்ய முடிவெடுத்து ஒரு சரக்கு வாகனத்தில் அதனை ஏற்றி அனுப்பினார்.
இதனை கவனித்த அந்த காளை மாடு, ஓடிச் சென்று சரக்கு வாகனத்தை இயக்க விடாமல் 1 மணி நேரமாக அங்கேயே நின்று பாசப்போராட்டம் நடத்தியது. டிரைவர் மற்றும் பசு மாட்டின் உரிமையாளரை வண்டியை இயக்க விடாமல் முட்டி தள்ளியது. பின்னர் ஒரு வழியாக வேன் புறப்பட தொடங்கியவுடன், அந்த பசு மாடு செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து சிறிது தூரம் சாலையில் ஓடிச் சென்றது. 1 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி சென்று மூச்சு வாங்கி நின்றது. பசு மாட்டை பிரிய மறுத்து காளை மாடு பாசப் போராட்டம் நடத்தியது அனைவரையும் வியப்படைய செய்தது.
இச்செய்தியை அறிந்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இரு மாடுகளையும் சேர்த்து வைக்க முடிவு செய்தார். அவருடைய மகன் உதவியால், தற்போது மீண்டும் மஞ்சமலை லக்ஷ்மியுடன் இணைந்துவிட்டது. இந்த சம்பவம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

மற்ற செய்திகள்
