'எனக்கு 78 குழந்தைகள் இருக்காங்க'... '13 பெண்கள் கர்ப்பமாக இருக்காங்க'... 'இந்த சேவைக்கு இது தான் என்னோட கட்டணம்'... வியக்கவைக்கும் 44 வயது பேராசிரியர்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயது பேராசிரியர் Ari Nagel. இவர் தனக்கு 78 குழந்தைகள் இருப்பதாகவும், தற்போது 13 பெண்கள் கர்ப்பமாக இருப்பதாகவும் பெருமையுடன் கூறியுள்ளார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

உயிரணு தானம் செய்யும் Ari Nagel, இதை ஒரு சேவையாகவே செய்து வருகிறார். எனக்கு இதனைப் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதே எனக்குப் பெருமை எனக் கூறியுள்ள Ari Nagel, சில குழந்தைகளைத் தினமும் பார்ப்பதாகக் கூறும் இவர், சிலரைப் பார்த்ததே இல்லை எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே உயிரணு தனத்திற்காக ஒரு டாலர் கூட பணமாக இதுவரை பெற்றதில்லை எனக் கூறியுள்ள Ari Nagel, அவர்களின் குடும்பம் பெரிதாவது தான் எனக்குப் பெரிய சந்தோசம் எனக் கூறியுள்ளார். அதே நேரத்தில் சில முத்தங்களும், அரவணைப்புகளும் தான் எனக்குப் பெரிய கட்டணம் எனவும் Ari Nagel மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
பேராசிரியராக பணியாற்றி விட்டு Ari Nagel உயிரணு தானம் செய்து வருவது பலருக்கு வியப்பை ஏற்படுத்தினாலும், இதில் கிடைக்கும் சந்தோசம் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று என Ari Nagel கூறியுள்ளார்.
