'இவர்களுக்கெல்லாம்' அதிக ஆபத்து... கொரோனாவால் மக்கள் சந்திக்கும் 'மிகப்பெரும்' பிரச்சனை... ஐநா சபை 'எச்சரிக்கை'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | May 14, 2020 07:42 PM

கொரோனாவால் உலக மக்கள் உளவியல் ரீதியிலான பாதிப்பை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

Major Mental Health Crisis Looming From Coronavirus Pandemic UN

கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் புரட்டிப் போட்டுள்ள நிலையில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இழப்பால் வருத்தம், வேலை இழப்பால் அதிர்ச்சி, தனிமைப்படுத்தல், கடினமான குடும்ப சூழல், நிச்சயமற்ற எதிர்காலத்தால் ஏற்பட்டுள்ள பயம் என மருத்துவ, சுகாதார பணியாளர்களில் தொடங்கி,  வேலை இழந்தவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் என பலரும் மிகுந்த மன அழுத்தத்தை சந்தித்து வருகின்றனர்.

இதனால் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நாடுகள் சமூக மற்றும் மனரீதியாக மக்களுக்கு எவ்வாறு ஆதரவு கொடுப்பது என்பதையும் சிந்திக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. மேலும் முன்னணியில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், வயதானவர்கள், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள், முன்பே மனநல பிரச்சனைகளைக் கொண்டவர்கள் மற்றும் நெருக்கடியில் சிக்கியுள்ளவர்கள் ஆகியோர் அதிகம் ஆபத்தில் உள்ளதால் நாம் அவர்களுக்கு ஆதரவாக நின்று உதவ வேண்டுமென ஐநா கூறியுள்ளது.