எஸ்கலேட்டர் விபத்தில் சிக்கிய.. ‘மூதாட்டிக்கு நடந்த பயங்கரம்..’

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jul 23, 2019 07:28 PM

சீனாவில் எஸ்கலேட்டர் விபத்தில் சிக்கி மூதாட்டி ஒருவரின் கால் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman loses her leg in escalator accident in China

சீனாவின் ஹர்பின் மாகாணத்திலுள்ள மால் ஒன்றுக்கு சென்ற மூதாட்டி ஒருவர் அங்குள்ள எஸ்கலேட்டரில் பயணித்துள்ளார். அப்போது திடீரென நகரும் படிக்கட்டுகள் உடைந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவசர பட்டனை அழுத்தியபோதும் மூதாட்டியின் கால் அதற்குள் எஸ்கலேட்டரில் சிக்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி மூதாட்டியை மீட்டுள்ளனர். இதில் அவருடைய இடது கால் முழங்காலுக்குக் கீழ் துண்டாகியுள்ளது. மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூதாட்டிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்கலேட்டர் அருகே பராமரிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தும் அதை மூதாட்டி கவனிக்காததாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக ஷாப்பிங் மால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஷாப்பிங் மால் சரியாகப் பராமரிக்கப்படாததே விபத்துக்குக் காரணம் என மூதாட்டியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ESCALATOR ##ACCIDENT #CHINA