‘அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவி’.. களமிறங்கும் 2007 -ல் டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் முக்கிய நபர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 31, 2019 05:18 PM
கடந்த 2007 -ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வென்றபோது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர் தற்போது தலைமை பயிற்சியாளர் பதிவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் மற்றும் பௌலிங் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. இந்நிலையில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால் இவர்களது பதவிக்காலம் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையில் புதிய பயிற்சியாளர்களை தேர்தெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடித்து அதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதனால் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே, நியூஸிலாந்து வீரர் மைக் ஹெசன் உள்ளிட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.
கடந்த 2007 -ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பை வென்றது. அப்போது இந்திய அணியின் மேலாளராக இருந்தவர் லால்சந்த் ராஜ்புத். இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதிவிக்கு ராஜ்புத் விண்ணபித்துள்ளார். இவர் தற்போது ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.