ஊழியர்களை 'வேலையை' விட்டு தூக்கி... 'சம்பளத்திலும்' 50% கைவைத்த 'முன்னணி' நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான சொமாட்டோ 13% ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால் அடியோடு பொருளாதாரம் படுத்து விட்டது. இதனால் தற்போது உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலையின்மை தலை விரித்தாடுகிறது. குறிப்பாக முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்களது ஊழியர்களை கொத்துக்கொத்தாக வேலை நீக்கம் செய்து வருகின்றன. நேற்று கால் டாக்சி நிறுவனமான உபேர் தன்னுடைய 3700 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது.
அந்த வகையில் தற்போது சொமாட்டோ நிறுவனம் தன்னுடைய ஊழியர்களில் 13% பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் நிறுவனத்தில் அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் 50% சம்பளத்தை குறைத்துள்ளதாகவும், இது ஜூன் முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்து இருக்கிறது. லாக்டவுன் காரணமாக ஹோட்டல்கள் மூடப்பட்டது. ஆன்லைன் டெலிவரிக்கு அனுமதி மறுப்பு, மக்களின் வாங்கும் திறன் குறைந்தது ஆகியவையே சொமாட்டோவின் இந்த முடிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.