'சல்லி சல்லியா நொறுங்கிய சோஷியல் டிஸ்டன்சிங்'... 'ஊரே கூடி நடத்திய திருவிழா'... அதிரவைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அரசு சில தளர்வுகளை அறிவித்திருந்தது. இருப்பினும் பொதுமக்கள் கூடும் விழாக்கள் மற்றும் கோவில் திருவிழாக்களுக்குத் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஊர் மக்கள் ஒன்று கூடி, திருவிழா போன்ற ஒன்றை நடத்திய நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் பொதுமக்கள் திருவிழா நடத்த முறைப்படி கிராம மேம்பாட்டு அலுவலரிடம் அனுமதி வாங்கியுள்ளார். இதையடுத்து ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், திருவிழா நடந்த அனுமதி வழங்கிய கிராம மேம்பாட்டு அலுவலர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இதுபோன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடுவது பாதிப்பை இன்னும் அதிகரிக்கும் என்பதே பலரின் கவலையாக உள்ளது.