'அவங்க சூப்பரா கொரோனாவை கண்ட்ரோல் பண்றாங்க...' 'அவங்க கூட சேர்ந்து மூலிகை மருந்து தயார் பண்ண நாங்க ரெடி...' உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | May 15, 2020 07:11 PM

ஆப்பிரிக்க அரசு எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கைகளால் முன்பு கணித்ததை விட மிக குறைந்த அளவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார துறை பாராட்டியுள்ளது.

WHO says Coronavirus is less likely to occur in Africa

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், சிறிய நாடு, வல்லரசு நாடு என எந்தவித பாகுபாடும் இன்றி அனைவரையும் ஆட்டி படைத்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடிவந்தாலும், ஒரு சில நாடுகளே கடுமையான நடவடிக்கைகளால் வெற்றி பெறுகிறது எனலாம். தற்போது அந்த வெற்றி கனி, ஆப்பிரிக்க நாடுகளை நெருங்கி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு ஆப்பிரிக்க நாடுகளின் அரசுகள் கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் இறங்காவிட்டால் இந்த வருட இறுதிக்குள் சுமார் 2 லட்சம் பேர் வரையில் கரோனா தொற்றால் இறக்கக் கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. உலக வல்லரசு நாடுகளின் நிலையையும், உலக சுகாதார துறையின் அறிவுரையையும் கவனித்த ஆப்பிரிக்க அரசுகள் நோய்த் தடுப்பு முயற்சிகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டன.

எல்லா இடங்களிலும், அனைத்து தரப்பு மக்களிடமும் கொரோனா நோய் பற்றிய விழிப்புணர்வுகளையும், சமூக இடைவெளி, கை கால்களைக் கழுவுதல் போன்ற பாதுகாப்பு முறைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, அதனை தீவிரமாகக் கடைப்பிடிக்க வலியுறுத்தியது.

ஆப்பிரிக்க அரசுகளின் இம்முயற்சிகளை கவனித்த உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்க நாடுகளுக்கான பிரதிநிதி மாதிஷிடிசோ மோய்தி, உலக சுகாதார அமைப்பின் மூலம் ஆப்பிரிக்க நாடுகளின் கிராமப்புறங்களில் கொரோனா தொற்று சமூகப் பரவல் ஏற்படும் நிலையில் 26% பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாவார்கள் என எச்சரித்தோம்.

அதனால் ஆப்பிரிக்க அரசு சிறப்பாக திட்டமிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக அங்கு நோய்ப் பரவலின் தீவிரம் குறையும். தற்போது அங்குள்ள கிராமப் பகுதிகளில் நோய்த்தொற்று குறைந்திருக்கிறது' என பாராட்டியுள்ளார்.

மேலும் மக்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யுமாறும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளார். கொரோனாவை எதிர்கொள்வதற்கான மூலிகை மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆப்பிரிக்காவில் உள்ள மூலிகை மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற உலக சுகாதார அமைப்பு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்