'செப்டம்பருக்குள்' 'தடுப்பூசி' என்று சொல்லப்படுவதில் 'நம்பிக்கையில்லை...' 'சோதனையில்' உள்ள மருந்துகளும் 'கைவிடப்பட' வாய்ப்பு... 'ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் அதிர்ச்சித் தகவல்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 15, 2020 05:42 PM

செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகும்  என சில அறிக்கைகள் தெரிவிப்பதில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக  ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

The vaccine cannot be produced until September

வேகமாக பரவி வரும் கொரோனாவைக்  கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதுவரை சமூக விலகலை கடைப்பிடிப்பது மட்டும்தான் தீர்வாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் எல்லாம் திட்டமிட்டப்படி வெற்றிகரமாக நடந்தால்,  ஒரு வருடத்தில் மருந்து தயாராகி விடும் என்று ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம்தெரிவித்துள்ளது.

தற்போது சோதனையில் உள்ள சில மருந்துகள் அடுத்த கட்டத்திற்கு வளர்ச்சி அடையாமல் கைவிடப்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகும்  என சில அறிக்கைகள் தெரிவிப்பதில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக  ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் கூறியுள்ளது..

கொரோனா வைரஸ் நம் வாழ்வில் எப்போதுமே இருக்கும் என நம்பவில்லை என்றும்,  சில தடுப்பூசிகளால் இதனை கட்டுப்படுத்த முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.