'42' பேரு, '6000' பசுவோட கிளம்பிய கப்பல்,,.. 'திடீரென' வந்த 'புயலால்',,.. அடுத்தடுத்து நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்!!!
முகப்பு > செய்திகள் > உலகம்நியூசிலாந்தில் இருந்து 42 பேர் மற்றும் 6000 பசுக்களுடன் ‘தி கல்ப் லைவ்ஸ்டாக்-1’ என்ற கப்பல் ஒன்று சீனா நோக்கி புறப்பட்டது.
இந்நிலையில், அந்த கப்பல் ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள தீவு ஒன்றின் அருகே வந்த போது, புயல் ஒன்றில் சிக்கி மாயமானது. முன்னதாக இந்த கப்பலில் இருந்து, ஜப்பான் கடலோர காவல்படைக்கு துயர அழைப்பு சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜப்பான் கடற்கரைக்கு சொந்தமான கண்காணிப்பு விமானம், உயிர் காப்பு உடை அணிந்து, ஒருவர் கடலில் அலைந்து கொண்டிருப்பதை கண்டது. அவரை அந்த விமானம் பத்திரமாக மீட்ட நிலையில், மாயமான கப்பலில் வந்த சிப்பந்தி என்பது தெரிய வந்தது. அவர் சிறந்த உடல்நலத்துடன் உள்ள நிலையில், தான் வந்த கப்பல் மாயமானது என தெரிவித்துள்ளார்.
அந்த கப்பலில் மொத்தம் 43 சிப்பந்திகள் இருந்த நிலையில், அதில் 39 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர். 2 பேர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களாவர். மீதமுள்ள 2 பேர் ஆஸ்திரேலிய நாட்டினர் என தகவல்கள் கூறுகின்றது. ஒருவர் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 42 பேர் மற்றும் கால்நடைகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
பலத்த சூறாவளி மற்றும் இடைவிடாத மழை காரணமாக, காணாமல் போன கப்பலை தேடும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.