'தீவிர நடவடிக்கையால் குறையும் பாதிப்பு'... 'அதுவும் இந்த 5 மண்டலங்களில்'... 'சென்னை மக்களுக்கு வெளியாகியுள்ள நிம்மதி தரும் செய்தி!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்வடசென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையடுத்து தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக வடசென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. வடசென்னையில் தற்போது பாதிப்பு 5 முதல் 6 சதவீதமாக உள்ளது. இதுகுறித்து பேசியுள்ள மாநகராட்சி அதிகாரிகள், "வடசென்னை பகுதியில் கடந்த 2 வாரமாக தினசரி 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 200க்கும் குறைவாகவே பாதிப்புகள் பதிவாகி வருகிறது. திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார் பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளது.
தற்போது தளர்வுகள் அதிகரிக்கப்பட்டிருப்பதால் சென்னையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, வெளி ஊர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சென்னைக்கு வருபவர்கள், கொரானாவால் பாதிக்கப்படுபவர்களின் உறவினர்கள், தொடர்பில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். குணமடைந்தவர்களின் சதவீதம் 89 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் சதவீதம் 9 ஆகவும் உள்ளது. அண்ணாநகர், அடையாறு, கோடம்பாக்கம் ஆகிய 3 மண்டலங்களில் மட்டுமே பாதிப்பு அதிகமாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.