இனிமே 'நாட்ட' வழிநடத்துறது ரொம்ப 'கஷ்டம்',.. பதவி விலகும் 'ஜப்பான்' பிரதமர்??.. 'காரணம்' என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Aug 28, 2020 01:06 PM

ஜப்பான் நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

japan pm shinzo abe to resign for health reasons

'ஷின்சோவுக்கு ஏற்பட்டுள்ள நோய் மோசமடைந்துள்ள நிலையில், அவர் ராஜினாமா செய்ய விரும்புகிறார். நாட்டை வழிநடத்துவதில் சிக்கலை ஏற்படுத்தும் என அவர் கவலைப்படுகிறார்' எனவும் சில உள்ளூர் ஊடங்கங்கள் குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டு வருகிறது.

ஷின்சோ சமீபத்தில் இரண்டு முறை மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்த நிலையில், மீண்டும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஷின்சோ அபே, இரண்டாவது முறையாக ஜப்பானின் பிரதமராக பதவியேற்றிருந்த நிலையில், நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை படைத்திருந்தார். முன்னதாக, 2007 ஆம் ஆண்டு தான் வகித்து வந்த பிரதமர் பதவியை உடல் உபாதை காரணமாக பதவியை துறந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Japan pm shinzo abe to resign for health reasons | World News.