VIDEO: ‘ரசிகர்கள் இல்லன்னா இப்டிதான் நடக்கும்போல’.. கிரிக்கெட் வீரர்களுக்கு வந்த சோதனை’.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 13, 2020 04:23 PM

கொரோனா பாதிப்பு காரணமாக மைதானத்துக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படாததால் சிட்னி மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது.

Players fetch ball from stands as coronavirus scare sees empty

ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பார்வையாளர்கள் இன்றி சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியின் 19-வது ஓவரில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் சிஸ்சர் விளாச, பந்து கேலரியில் விழுந்தது. பொதுவாக கேலரிக்குள் விழும் பந்துகளை ரசிகர்கள் எடுத்து கொடுப்பார்கள். ஆனால் இன்றைய போட்டியில் ரசிகர்கள் இல்லாததால் நியூஸிலாந்து வீரர் ஃபெர்குஷன் கேலரிக்குள் சென்று பந்தை தேடி எடுத்தார். அதேபோல் நியூஸிலாந்து பேட்டிங் செய்யும்போது இதேபோன்று ஆஸ்திரேலிய வீரர்கள் கேலரியில் நீண்ட நேரமாக பந்தை தேடி எடுத்தனர்.

பொதுவாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது சிக்ஸர், பவுண்டரிகளுக்கு பந்துகள் செல்லும்போதும், விக்கெட் விழும் போதும் ரசிர்கள் ஆரவாரம் செய்வார்கள். இது கிரிக்கெட் வீரர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் ரசிகர்கள் இல்லாமல் சிட்னியில் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இதனால் கேலரியில் பந்து விழும் போது ஒவ்வொரு முறையும் வீரர்கள் அங்கு சென்று பந்தை தேடி எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #CRICKET #ICC #COVID_19 #CORONAVIRUS