‘கொரோனா வைரஸ் இந்தியாவில் இரண்டாவது உயிரை பறித்தது...’ கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது உறுதியானது...!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியின் 69 வயதான பெண் ஒருவர் கொரோனோ வைரஸ் தாக்கி உயிரிழந்த சம்பவம் இந்திய மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் உஹான் மாகாணத்தில் விலங்குகளிருந்து மனிதர்களுக்கு பரவிய கொரோனா என்னும் வைரஸ் கடந்த நான்கு மாதங்களாக உலக நாடுகளை நடுங்க செய்துள்ளது.முதலில் இது பயோ வார்க்காக உருவாக்கப்பட்ட வைரஸ் என்று அனைவராலும் பேசப்பட்டது. ஆனால் தற்போது இந்த வைரஸ் உலக சுகாதார அமைப்பினால் உயிர் தோற்று நோயாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவி மிக குறைவாகவே பரவி வந்தாலும் இதுவரை இரு உயிர்களை பழிவாங்கி உள்ளது. ஏற்கெனவே கர்நாடக முதியவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பால் டெல்லி ஜானக்புரி பகுதியைச் சேர்ந்த 69 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். தற்போது இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்திருக்கிறது.
