அந்தரத்தில் மிதக்கும் சவப்பெட்டிகள்.. 2000 வருஷமா இப்படித்தானாம்.. உலகத்தையே நடுங்க செய்யும் பழங்குடி மக்களின் வினோத பாரம்பரியம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Aug 29, 2022 12:34 PM

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பழங்குடி இன மக்கள், இறந்தவர்களின் சவப்பெட்டிகளை மலை முகட்டில் தொங்க விடுகிறார்கள். இந்த பாரம்பரியத்தை 2000 ஆண்டுகளாக இந்த மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

coffins have been suspended on cliff for 2000 years

Also Read | அழகிப்போட்டியில் Make Up க்கு NO சொன்ன இளம்பெண்.. 100 வருஷ வரலாற்றில் நடந்த அதிசயம்.. அவங்க சொன்ன காரணம் தான் செம்ம..!

பழங்குடி மக்கள்

உலகம் முழுவதும் பல விதமான பழங்குடி இனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு இனத்தை சேர்ந்த மக்களும் தங்களுக்கே உரித்தான பாரம்பரிய பழக்கவழக்கங்களை கொண்டிருக்கின்றனர். இவை வெளியுலகத்தை சேர்ந்த மக்களுக்கு வியப்பை ஏற்படுத்துவதுண்டு. அந்த வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பழங்குடி இன மக்களின் வித்தியாசமான பாரம்பரிய வழக்கம் இன்றும் உலக அளவில் பலரையும் திகைப்படைய செய்து வருகிறது.

coffins have been suspended on cliff for 2000 years

பிலிப்பைன்ஸ் நாட்டின் சகடா நகரத்திற்கு அடுத்தபடியாக உள்ள மலைப்பகுதிகள் முழுவதும் பழங்கால சவப்பெட்டிகள் தொங்குகின்றன. இங்குள்ள இகோரோட் எனும் பழங்குடி இன மக்கள், தங்களது இனத்தை சேர்ந்த மக்கள் மரித்த பிறகு, அவர்களை சவப்பெட்டியில் கிடத்துகிறார்கள். அதனுள் மூலிகை செடிகளை வைக்கும் இந்த மக்கள், இறந்தவரின் பெயர் பொறித்த கலசத்தை பெட்டியினுள் வைக்கிறார்கள். அதனை தொடர்ந்து சவப்பெட்டி முழுவதும் புகை நிரப்பப்படுகிறது. சடலத்தை பல ஆண்டுகளுக்கு பத்திரப்படுத்தும் நோக்கில் இந்த மக்கள் இப்படியான சடங்கை செய்கின்றனர்.

பாரம்பரியம்

அதனை தொடர்ந்து, மலை முகட்டில் சவப்பெட்டியை வைத்து இறந்தவரின் பெயரை உரக்க உச்சரிக்கின்றனர். ஏற்கனவே இறந்துபோனவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளும் விதமாக இந்த சடங்கு பின்பற்றப்படுகிறது. ஏற்கனவே சீனா உள்ளிட்ட சில நாடுகளில் உள்ள பழங்குடி மக்கள் இதுபோன்ற சடங்குகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், அவர்கள் இதனை தற்போது கைவிட்டுவிட்ட நிலையில் இகோரோட் மக்கள் இன்றும் இந்த பாரம்பரியத்தை கடைபிடித்து வருகின்றனர்.

coffins have been suspended on cliff for 2000 years

இந்த அந்தரத்தில் மிதக்கும் சவப்பெட்டிகளை பார்க்க தினந்தோறும் 160 க்கும் மேற்பட்ட சுற்றுலாவாசிகள் இந்த பகுதிக்கு சென்றுவந்தனர். இருப்பினும் கொரோனா காரணமாக இந்த பகுதிக்குள் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சுற்றுலாவாசிகள் இந்த பகுதிக்குள் சொல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

Also Read | "மகனை பார்க்க போனா Parking-ல தான் தூங்குவேன்".. தாயார் சொன்ன தகவல்.. எலான் மஸ்கின் Reply பார்த்து நெட்டிசன்கள் ஷாக் ..!

Tags : #COFFINS #CLIFF #சவப்பெட்டிகள்

மற்ற செய்திகள்