'இந்து சிறுமிகள கடத்திட்டு போய்'... 'பாகிஸ்தானில் பரபரப்பு'... 'இந்தியா அதிரடி'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Jan 18, 2020 02:00 PM

இந்து சிறுமிகளை கடத்தி, பலவந்தமாக திருமணம் செய்து வைக்கப்படுவது தொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

Hindu girls kidnapped in Pakistan and India reacts

பாகிஸ்தான் தெற்கு சிந்து மாகாணத்தின் தார்பர்கர் மாவட்டத்தில் உள்ளது, உமர் கிராமம். அங்கு வசித்து வரும், சாந்தி மேக்வா மற்றும் சர்மி மேக்வா ஆகிய இரண்டு இந்து சிறுமிகள், கடந்த ஜனவரி 14-ம் தேதி கடத்தப்பட்டனர். அதற்கு அடுத்த நாள், மேலும் ஒரு சிறுமி கடத்தப்பட்டார்.

இவ்வாறு கடத்தப்படும் சிறுமிகளுக்கு, பலவந்தமாக திருமணம் செய்து வைக்கப்படுவதாகத் தெரிகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசில், சிறுபான்மையினரான இந்து சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளை கடத்திய விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் தூதரகத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்து மதத்தினர் பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருப்பதால், அங்கு அரங்கேறும் இம்மாதிரியான சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

Tags : #PAKISTAN #INDIA #HINDU