'நான் 'இந்து' என்பதால் என்ன ஒதுக்கி வச்சாங்க'...'அவங்க பெயரை சொல்ல போறேன்'...குமுறிய வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Dec 28, 2019 10:43 AM

தான் இந்து என்பதால் என்னுடன் சக வீரர்கள் பேசுவதை தவிர்த்ததாகவும், அவர்களின் பெயர்களை விரைவில் வெளியிட இருப்பதாகவும், பிரபல பாகிஸ்தான் வீரர் தனிஷ் கனோரியா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

Inzamam ul Haq Backed Me Against Discrimination, Says Danish Kaneria

பாகிஸ்தான் அணியில் பிரபல சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் தனிஷ் கனேரியா. இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.  61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 18 ஆட்டங்களில் 15 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். பாகிஸ்தான் உள்ளூர் போட்டிகளில் 1000-க்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், ''தனிஷ் கனேரியா இந்து என்பதால், அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட பாகிஸ்தான் வீரர்கள் விரும்பியதில்லை'' என பரபரப்பு தகவலை தெரிவித்தார். இது கிரிக்கெட் உலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து தற்போது மனம் திறந்த  தனிஷ் கனேரியா, அக்தர் கூறியது முற்றிலும் உண்மை என கூறியுள்ளார்.

மேலும் அதுகுறித்து பேசிய அவர், நான் இந்து என்பதால் என்னை சில வீரர்கள் ஒதுக்கி வைத்தார்கள். அவர்களின் பெயர்களை நான் விரைவில் வெளியிட இருக்கிறேன். முன்பு இதுகுறித்து பேச எனக்கு தைரியம் இல்லை. தற்போது எனக்கு அந்த தைரியம் வந்து இருப்பதால் விரைவில் அதுகுறித்து பேச இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #CRICKET #PAKISTAN #DANISH KANERIA #HINDU #SHOAIB AKHTAR #TEAMMATES #INZAMAM UL HAQ