உலகின் 'சக்திவாய்ந்த' பாஸ்போர்ட் பட்டியல்... 'முதலிடம்' பிடித்த ஜப்பான்... 'இந்தியாவுக்கு' எத்தனாவது எடம்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > உலகம்By Manjula | Jan 11, 2020 12:09 AM
உலகின் சக்திவாய்ந்த மற்றும் மோசமான பாஸ்போர்ட்டுகள் கொண்ட நாடுகளின் பட்டியலை(2020) ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜப்பான் இப்படியிலில் முதலிடம் பிடித்துள்ளது. ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

2-வது இடத்தை சிங்கப்பூர் நாடு பிடித்துள்ளது. இதை வைத்து 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். 3-வது இடம் ஜெர்மனிக்கு இதை வைத்து 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். அதற்கடுத்த இடத்தில் இருக்கும் நாடுகளின் பட்டியல் இதுதான்.
4. பின்லாந்து மற்றும் இத்தாலி
5. ஸ்பெயின், லக்சம்பர்க் மற்றும் டென்மார்க்
6. ஸ்வீடன் மற்றும் பிரான்ஸ்
7. சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, அயர்லாந்து, ஆஸ்திரியா
8. அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே, கிரீஸ், பெல்ஜியம்
9. நியூசிலாந்து, மல்டா, கிரீஸ் ரிபப்ளிக், கனடா, ஆஸ்திரேலியா
10. ஸ்லோவாக்கியா, லித்தானியா மற்றும் ஹங்கேரி
இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 82-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 84-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இதேபோல மோசமான பாஸ்போர்ட்டுகள் பட்டியலில் வடகொரியா, சூடான், நேபாளம், லிபியா, ஏமன், சோமாலியா, பாகிஸ்தான், சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இருக்கின்றன.
