'அவர் திரும்ப வருவாருனு எனக்கு தோனல'... 'தோனி குறித்து ஹர்பஜன் அதிரடி!'... 'ரசிகர்கள் அதிர்ச்சி'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Jan 17, 2020 11:56 AM

இந்திய கிரிக்கெட் அணியில் இனிமேல் தோனி விளையாடுவது சந்தேகமாக உள்ளது என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

Harbajan says he hardly believes Dhnoi\'s return to team

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில், ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக மட்டுமே தோனி பயிற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்திய அணிக்காக விளையாடுவாரா என்பது சந்தேகம் தான் எனவும் கூறியுள்ளார்.

மகேந்திர சிங் தோனி, தனது சொந்த ஊரான ராஞ்சியில் தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ரஞ்சி டிராஃபியில் பங்கேற்ற ஜார்க்கண்ட் அணியுடன் தீவிர பயிற்சியில் உள்ளார்.

இந்நிலையில், தோனி தங்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருவது, அதிர்ச்சி அளிப்பதாக ஜார்க்கண்ட் அணி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

தோனியின் ஓய்வு குறித்து, பிசிசிஐ-யோ அல்லது தோனியோ இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்காத நிலையில், இது போன்ற நிகழ்வுகள் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #MSDHONI #HARBAJAN #INDIA