‘செல்போன் வாங்குனா வெங்காயம் இலவசம்’!.. ‘மிரள வைத்த ஆஃபர்’.. அலைமோதும் கூட்டம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Dec 06, 2019 12:53 PM
நாடு முழுவதும் வெங்காய விலை உயர்ந்துள்ள நிலையில் கடை ஒன்றில் செல்போன் வாங்கினால் வெங்காயம் இலவசம் என அறிவிக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மழையால் பயிர்கள் சேதம், குறைந்த விளைச்சல் போன்ற காரணங்களால் வெங்காயத்தின் விலை உயர்ந்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகே லகுராபிர் பகுதியில் உள்ள கடையில் செல்போன் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் கடையில் கூட்டம் அதிகரித்துள்ளதாகவும், நிறைய பேர் செல்போன் வாங்கி வருவதாகவும் கடைக்காரார் தெரிவித்துள்ளார். வாரணாசியில் 1 கிலோ வெங்காயத்தின் விலை ரூ.130 முதல் ரூ.135 வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.