2019-ல் ‘பாகிஸ்தானியர்களால்’... அதிகமாக தேடப்பட்டவர்களின் ‘டாப் 10’ பட்டியலில் உள்ள ‘இந்தியர்கள்!’...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Dec 12, 2019 10:58 AM

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தானில் கடந்த ஆண்டு குகூள் தளத்தில் அதிகமாக தேடப்பட்ட 10 நபருக்குள் இடம்பிடித்துள்ளார்.

Googles Most Searched Indian Pilot Abhinandan In Pakistans Top 10

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் சுட்டுத் தகர்த்தார். அப்போது அவருடைய விமானம் சுடப்பட்டதையடுத்து அவர் பாகிஸ்தானிடம் சிக்கினார். அதையடுத்து பல கட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தானியர்களால் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட 10 நபர்களின் பட்டியலில் அபிநந்தன் வர்த்தமான் இடம்பெற்றுள்ளார். அதேபோல பாலிவுட் திரைப்பட நடிகையான சாரா அலிகானைப் பற்றியும் பாகிஸ்தானியர்கள் அதிகளவில் தேடியுள்ளனர்.

Tags : #PAKISTAN #GOOGLE #INDIANAIRFORCE #INDIAN #ABHINANDANVARTHAMAN #SARAALIKHAN