'சீண்டிய சீனா!... அடக்கிய ஐநா... மாஸ் காட்டிய இந்தியா'... "ஐ.நா-வில் ஓங்கி ஒலிக்கும் இந்தியாவின் குரல்!"...
முகப்பு > செய்திகள் > இந்தியாபாகிஸ்தானுக்கு ஆதரவாக மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை, ஐநாவில் எழுப்ப முயன்ற சீனாவின் முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் 5ம் தேதி, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை, மத்திய அரசு ரத்து செய்தது. அன்று முதல், ஐநாவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ரகசிய கூட்டத்தில், சீன நாட்டின் பிரதிநிதி, காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றம் அதிகரிப்பதைப் பற்றி எச்சரித்தார்.
அதற்கு பதிலளித்த ஐ.நா-வுக்கான இந்தியப் பிரதிநிதி, பாகிஸ்தான் பிரதிநிதிகளால் கூறப்படும் ஆபத்தான சூழ்நிலை எதுவும் காஷ்மீரில் தற்போது இல்லை. அதுமட்டுமில்லாமல், பாகிஸ்தான் பிரதிநிதிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இருக்கும் உறுப்பினர்கள் யாரும் சீனாவின் வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.
