'முஷாரஃப்புக்கு தூக்கு தண்டனை!'.. தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 17, 2019 01:14 PM

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு (Pervez Musharraf) மரண தண்டனை விதித்து, அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Pakisatan former president Pervez Musharraf gets Death Sentance

கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராக இருந்தவர் முஷாரஃப், ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்துவிட்டு அதிகாரத்திற்கு வந்தவர்.  கடந்த 2007-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இவர் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதை எதிர்த்து 2013-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில்தான் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப்புக்கு தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவதாக பெஷாவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 76 வயதான முஷாரஃப் தற்போது உடல் நலக்குறைவால் துபாயில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : #PERVEZMUSHARRAF #FORMERPRESIDENT #PAKISTAN #DEATHPENALTY