Veetla Vishesham Others Page USA

ஆத்தாடி எம்மாம்பெரிய ரொட்டி.."இவரைத்தான் தேடிட்டு இருக்கேன்".. இந்திய தொழிலதிபர் ஷேர் செஞ்ச வீடியோ..திகைத்துப்போன நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jun 17, 2022 06:53 PM

இந்திய தொழிலதிபரான ஹர்ஷ் கோயங்கா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இப்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Harsh Goenka shares video of man making rumali rotis

Also Read | "நைட்ல அவன்கூட போன் பேசிட்டே இருக்கா.. என் மனைவி எனக்கு வேணும்".. போலீசுக்கு போன கணவர்.. காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட பக்காவான பிளான்..!

ஹர்ஷ் கோயங்கா

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் RPG குழுமத்தின் தலைவருமான ஹர்ஷ் வர்தன் கோயங்கா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அறிக்கையின் படி இவருடைய சொத்து மதிப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதன் அடிப்படையில் கோயங்கா இந்திய பணக்காரர்களின் பட்டியலில் 85 வது இடத்திலும் உலக பணக்காரர்களின் பட்டியலில் 1445 ஆவது இடத்திலும் உள்ளார்.

இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில், நீளமான உருளையில் ஒருவர் பிரம்மாண்ட ருமாலி ரொட்டிகளை சுடுகிறார்.

ருமாலி ரொட்டி

இந்திய துணைக் கண்டத்தில் உருவான உணவு வகையான ருமாலி ரொட்டி வட இந்திய மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த ரொட்டியை மக்கள் விரும்பி உண்கின்றனர். ருமால் என்றால் கைக்குட்டை என்று பொருள். கைக்குட்டை அளவிலான ரொட்டி என்பதால் இதற்கு ருமாலி ரொட்டி எனப் பெயர் வந்ததாக கூறுவோரும் இருக்கின்றனர். பொதுவாக தந்தூரியுடன் இந்த ரொட்டிகள் இணைந்து பரிமாறப்படுவது வழக்கம்.

Harsh Goenka shares video of man making rumali rotis

இந்நிலையில் ஹர்ஷ் கோயங்கா பகிர்ந்துள்ள வீடியோவில் ஒருவர் மிகப்பெரிய ருமாலி ரொட்டிகளை சுடுவது பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

வைரல் வீடியோ

ஹர்ஷ் கோயங்கா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"என்னை உடல் எடையை குறைக்க ஒரு ரொட்டி மட்டும் எடுத்துக் கொள்ளும்படி கூறியிருக்கிறார்கள். நான் இப்பொது இவரை தேடிக்கொண்டிருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதனுடன் பிரம்மாண்ட ருமாலி ரொட்டிகளை ஒருவர் சுடும் வீடியோவையும் இணைத்துள்ளார் அவர். இந்த வீடியோ இப்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை இதுவரையில் 1.7 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

 

Also Read | "நான் என்ன கேட்டேன்.. நீங்க எதை அனுப்பிருக்கீங்க?".. ஆன்லைனில் உணவு ஆர்டர் செஞ்சது ஒரு குத்தமா? வைரல் வீடியோ.!

 

Tags : #HARSH GOENKA #RUMALI ROTIS #MAN MAKING RUMALI ROTIS

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Harsh Goenka shares video of man making rumali rotis | India News.