T20 WORLD CUP : ஆறிப் போன உணவை புறக்கணித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்??.. சேவாக் போட்ட பரபரப்பு ட்வீட்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு8 ஆவது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி இந்த தொடர் ஆரம்பமாகி இருந்த நிலையில், முதல் சுற்றில் இருந்து இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது.
இந்த சுற்றில் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதால், அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடி அரை இறுதிக்கு முன்னேறவும் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இதனிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதி இருந்த போட்டி, உலக கோப்பைத் தொடரில் விறுவிறுப்பு நிறைந்த போட்டிகளில் ஒன்றாகவும் மாறி இருந்தது. கடைசி பந்து வரை சென்ற இந்த போட்டியில், இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று அசத்தி இருந்தது. கோலி கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை இந்தியா பக்கம் திருப்ப, கடைசி பந்தில் சிங்கிள் அடித்து வெற்றி இலக்கை எட்டி இருந்தார் அஸ்வின்.
இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வரும் நிலையில், இன்று (27.10.2022) நெதர்லாந்து அணியை இந்தியா சந்திக்கிறது. இதனிடையே, சிட்னியில் நடந்த தனி பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஆறிப் போன உணவுகள் வழங்கப்பட்டது என கூறப்படுகிறது. இது குறித்து இந்திய அணியினர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) புகார் அளித்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறிய உணவுகள் வழங்கப்பட்டதுடன் மட்டுமில்லாமல், போதுமான அளவுக்கு உணவுகள் வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் மதிய உணவை புறக்கணித்த இந்திய வீரர்கள், இது பற்றி புகார் அளித்ததாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது.
பல கிரிக்கெட் பிரபலங்கள் கூட இந்திய அணியினருக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே, இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக்கும் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அவரது ட்வீட்டில், "மேற்கத்திய நாடுகள் சிறந்த முறையில் விருந்தோம்பல் செய்கின்றன என நினைக்கும் காலம் போய் விட்டது. அந்த விஷயத்தில் பல மேற்கத்திய நாடுகளை விட இந்தியா முன்னணியில் உள்ளது" என சேவாக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | காளான் பறிக்க போன பெண்கள்.. திடீர்ன்னு பாஞ்ச துப்பாக்கி குண்டு.. கொலையாளி சொன்ன குலை நடுங்கும் வாக்குமூலம்!!

மற்ற செய்திகள்
