‘அண்மையில் கொரோனாவால் மறைந்த பிரான்ஸ் EX ஜனாதிபதிக்கும், பிரிட்டன் இளவரசி டயானாவுக்கும் இடையில் நடந்தது என்ன?’.. அந்த 'ரொமான்ஸ் நாவல்' பற்றி அவரே கூறியிருந்த ‘சுவாரஸ்ய’ தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரான்சில் முன்னாள் ஜனாதிபதி உயிரிழந்த நிலையில், பிரிட்டன் இளவரசி டயானாவை அவருடன் இணைத்து பிரிட்டன் பத்திரிகைகள் உட்பட பல பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டிருந்தன.
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான Valery Giscard d'Estaingக்கும், பிரிட்டானிய இளவரசி டயானாவுக்கும் தொடர்பு இருந்ததாகவும், Giscard ஒரு பெண்களின் மனிதன் (Ladies man) என்றும் அவரைக் குறிப்பிட்டிருந்தன அந்த ஊடகங்கள். நல்ல உடல்வாகும், விலையுயர்ந்த ஆடைகளை அணியும் பழக்கமும் கொண்ட Giscard, திருமணமானவராக இருப்பினும், கவர்ச்சி நடிகைகளான Sylvia Kristel, புகைப்படக் கலைஞர் Merie-Laure de Decker என பலரும் அவருடன் இணைத்துப் பேசப்பட்டவர்கள்.
அப்படி 1995ஆம் ஆண்டு, 34 வயது டயானா ஒரு தொண்டு நிறுவன நிகழ்ச்சிக்காக பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையில் Giscard அருகே அமர்ந்திருந்ததால், இளவரசி டயானா மீது Giscardக்கு இருந்த தீரா மயக்கம் உண்டானதாகவும், பிரெஞ்சு பத்திரிக்கை ஒன்றில் இளவரசி டயானாவுக்கு அன்புக் கடிதம் ஒன்றை Giscard எழுதி வெளியிட்டதாகவும், ஆனால் அதே ஆண்டே, தனது திருமணம் முறிந்து விட்டதாக தொலைக்காட்சியில் டயானா பேட்டி கொடுத்தபோது, அவருக்கு வாழ்த்து அட்டையையும் Giscard அனுப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், 1997ல் ஆண்டு, கார் விபத்தில் டயானா பரிதாபமாக உயிரிழந்தபோது, அவருக்காக சென்ற முதல் பூங்கொத்தும் Giscardடையது தான் என்றும், அதன் பின்னர் அவர் “பிரான்ஸ் நாட்டு தலைவரும் பிரிட்டானிய இளவரசியும்” என்று எழுதிய காதல் நாவல் டயானவுக்கும் அவருக்குமான கதைதான் என்றும் செய்திகள் வெளியாகின. காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதப்பட்ட அந்த நாவல் வெளியாகி சக்கை போடு போட்ட பின்பு, அது வெறும் கற்பனைக் கதைதான் Giscard கூறியது குறிப்பிடத்தக்கது.