‘ஜனவரி மாதம் முதல்’... ‘இலவசமாக கொரோனா தடுப்பூசி’... ‘அடுத்தடுத்து அறிவிக்கும் நாடுகள்’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரான்சில் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியை சில நாடுகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளன. சமீபத்தில் ஜப்பான் நாட்டு அரசு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இதேபோல், யாருக்கெல்லாம் விருப்பம் உள்ளதோ, அவர்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பின்லாந்து நாடு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிரான்சில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெஸ் கூறும்போது, பிரான்ஸ் மக்கள் அனைவருக்கும தடுப்பூசி இலவசமாக போடப்படும். இதற்காக வருகிற நிதியாண்டில் 1.5 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்படும். ஐரோப்பிய ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்தின் ஒப்புதலுக்காக உள்ளதால் இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கப்படும்.
அதன்பிறகு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி மதல்கட்டமாக 10 லட்சம் மக்களுக்கு வழங்கப்படும். பின்னர் பிப்ரவரி முதல் 1.4 கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு மருந்து நிறுவனங்களிடம் இருந்து 200 மில்லியன் டோஸ் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாப்பாக இருக்கும் என்று மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்’ என்று கூறினார்.