'கத்துனா கொல பண்ணிடுவோம்' ... மது பாட்டில் முனையில் கொலை மிரட்டலோடு ... 'சிறுமி'க்கு நேர்ந்த கொடூர சம்பவம் ...
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமியை மூன்று பேர் மதுபோதையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது வீட்டில் கழிவறை இல்லாததால் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் அருகேயுள்ள பாலாற்றின் கரையோரம் கடந்த ஆறாம் தேதி இரவு 7 மணியளவில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த மூன்று பேர் சிறுமியை தூக்கி கொண்டு சென்றனர். சிறுமி கத்திய நிலையில் மது பாட்டிலை உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பின்னர் அச்சிறுமியை மூன்று பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அங்கிருந்து சென்ற சிறுமி அருகிலுள்ள சுடுகாட்டில் கிடந்த துணியை எடுத்து போர்த்திக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பயத்தில் இது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்த சிறுமி பின்னர் நடந்த சம்பவத்தை தனது குடும்பத்தாரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதைக் கேட்டு குடும்பத்திலுள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
உறவினர்களில் ஒருவர் இது குறித்து வாணியம்பாடி போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து விசாணை நடத்திய போலீசார், சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த மூன்று பேரையும் கைது செய்தனர். மது போதையில் சிறுமியை மது பாட்டில் நுனியில் மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை உருவாகியுள்ளது.
