'இந்த பூனையோட ஆக்டிவிடீஸ் எதுவும் சரி இல்லையே...' 'ஆத்தி, இது அது இல்ல...' 'குறுகுறுன்னு பாக்றப்போவே டவுட் ஆச்சு...' - அதிர்ச்சியில் உறைந்த தம்பதி...!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரான்ஸ் நாட்டு தம்பதிகள் உலகின் புகழ் பெற்ற மற்றும் பிரபலமான சவானா வகை பூனைக் குட்டியை வாங்க ஆசைப்பட்டு புலிக்குட்டியை வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புலி குட்டியை போலவே இருக்கும் பூனைக்குட்டி உலகின் மிக பிரபலமான சவானா வகை பூனை இனத்தை சேர்ந்தது. இந்தவகை சவானாக் குட்டியை பிரான்ஸ் நாட்டின் லே ஹாவ்ரே நகரைச் சேர்ந்த தம்பதிகள் வாங்கி வளர்க்க ஆசைப்பட்டுள்ளனர்.
இதற்காகவே சுமார் 3000 யூரோ அதாவது இந்திய மதிப்பில் சுமார் லட்சம் ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் சவானா பூனைக் குட்டியை ஆர்டர் செய்துள்ளனர்.
இந்நிலையில் ஆன்லைன் ஆர்டர் வீட்டிற்கு வந்த நிலையில், ஆசையாக பூனைக்குட்டியை வளர்க்க தொடங்கியுள்ளனர். நாளடைவில் பூனை குட்டியின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படவே அந்த தம்பதிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கவே காவல்துறையினர் விலங்கியல் நிபுணர்கள் மேற்கொண்ட சோதனையில், அது பூனைக் குட்டியல்ல சுமத்ரன் வகை புலிக்குட்டி என்பது தெரியவந்ததுள்ளது. இதை அறிந்த தம்பதியினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இந்நிலையில் தற்போது அந்த தம்பதிகளிடமிருந்த புலிக் குட்டி மீட்கப்பட்டு வன உயிரியல் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டதுள்ளதும் குறிப்பிடத்தக்கது.