'அவள் வருவாளா...?' 'அடேய், இது 90'S கிட் புலிடா...' ஜோடியை தேடி 2000 கிலோ மீட்டர் நடந்த 'மொரட்டு சிங்கிள்' டைகர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 06, 2020 10:36 AM

ஆண் புலி ஓன்று பெண் துணையைத் தேடி சுமார் இரண்டாயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தேடியதாக  வனத்துறை அதிகாரியான பர்வீன் காஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

The tiger has traveled 2000 KM in search of a girlfriend

கடந்த 2019-ம் ஆண்டு புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அவற்றின் உடலில் ரேடியோ(GPS) கருவி பொருத்தப்பட்டது. இதனை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்ததில் ஒரு புலி மட்டும் வயல்கள், மலைகள், காடுகள், ஆறுகளைக் கடந்து தன் இணையைத் தேடி அலைந்து திரிவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புலி சென்ற வழித்தடத்தின் வரைபடத்தையும் அந்த வனத்துறை அதிகாரி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.பகலில் ஓய்வெடுத்து, இரவில் அந்த புலி நடந்து சென்று பெண் துணையை தேடுவதாகவும், இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பு இல்லை என்றும் அந்த வனத்துறை அதிகாரி விளக்கியுள்ளார்.

இந்த சம்பவம் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த 90's கிட் என அடையாளப் படுத்திக் கொள்ளும் தொண்ணூறுகளில் பிறந்த இளைஞர்கள்  "இது நம் இனத்தை சேர்ந்த புலி, அதனால் தான் இன்னும் முரட்டு சிங்கிளாக ஜோடியை தேடி அலைகிறது" என்று வேடிக்கையாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

Tags : #TIGER