'மூஞ்சுக்கிட்ட வந்து கடுப்பை கிளப்பிய ஈ...' 'ஈயை கொல்ல எலக்ட்ரிக் பேட்டோட கிளம்பியா தாத்தா...' 'திடீர்னு வீடே வெடிச்சு தூள் தூள் ஆயிடுச்சு...' - என்ன நடந்துச்சு...?
முகப்பு > செய்திகள் > உலகம்பிரான்ஸ் நாட்டில் உள்ள பார்கோ -செர்னோ பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் ஈயை கொல்லும் முயற்சியில் தனது வீட்டை எரித்துள்ளார்.

இரவு உணவு உண்ண சென்ற முதியவரைச்சுற்றி ஈ ஒன்று பறந்து கொண்டே இருந்திருக்கிறது. அந்த ஈயின் ரீங்கார சத்தம் அவருக்கு கடுப்பைக் கிளப்ப அந்த ஈயைக் கொல்லும் மின்சார பேட் ஒன்றின் மூலம் கொல்லலாம் என்று அவர் முடிவு செய்துள்ளார்.
ஆனால் அந்த சமயத்தில் அவரது வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டரில் கசிவு நிகழ்ந்துள்ளது. மின்சார பேட்டை இவர் பயன்படுத்த தொடங்கிய போது ஏற்கனவே இருந்த கேஸ் கசிவால் சிலிண்டர் வெடித்துள்ளது.
இதில் அவரது வீட்டின் சமையலறை முற்றிலும் எரிந்து நாசமாகி உள்ளது. வீட்டின் மேல் கூரையும் கணிசமான சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. உள்ளூர் ஊடகங்களில் செய்தியில் கையில் தீக்காயங்களுடன் அந்த முதியவர் உயிர் தப்பி விட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அந்த ஈ என்ன ஆனது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
தற்போது அந்த ஊரிலேயே வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
