'ஊரடங்கிற்கு பிறகு திறக்கப்பட்ட திருப்பதி கோவில்'... 'சிக்ஸர் அடித்த உண்டியல் காணிக்கை'... புதிய சாதனை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கிற்குப் பிறகு திருப்பதி கோவில் திறக்கப்பட்ட நிலையில், அதன் உண்டியல் காணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து நாடு முழுவதும் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் பிரசித்திபெற்ற திருப்பதி வேங்கடாசலபதி கோவிலும் மூடப்பட்டது.
இதையடுத்து தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பதி கோவிலானது கடந்த ஜூன் 11 ம் தேதி முதல் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் சுவாமி தரிசனம் செய்ய வார விடுமுறை நாட்களில் 13,486 பக்தர்கள் வருகை தந்தனர்.
அதன்மூலம் சனிக்கிழமையன்று வருகை தந்த பக்தர்கள் உண்டியலில் அளித்த நன்கொடையின் மதிப்பு ரூ. 1.02 கோடி எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முதன்முறையாகச் சாதனை அளவாக உண்டியல் மூலம் ஒரு கோடி ரூபாய் நன்கொடையாகக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.