'மரண தருவாயில் நான் விரும்புவது இதுதான்'.. கோர்ட்டில் கைதி கேட்ட நெஞ்சை உருக்கும் கோரிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | May 29, 2019 01:35 PM
பெற்ற தாயின் மடியில் மரணிக்க விரும்புவதாக கைதி ஒருவர் தனது கடைசி ஆசையாக கோரியுள்ள சம்பவம் கோர்ட்டை உருக்கியுள்ளது.
ராஜஸ்தானில் கள்ளநோட்டு வைத்திருந்ததற்காக கைதாகி ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகையிலை மற்றும் சிகரெட் பழக்கத்தால் உண்டான இந்த நோயினால் பாதிக்கப்பட்ட அந்த நபர் கோரிய ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த கைதி, தன் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்குக்கான விசாரணை ஒரு சுமுகத்துக்கு வருவதற்குள் தனது ஆயுளே முடிவடைந்துவிடவோ அல்லது புற்று நோயின் தாக்கத்தால் சுயநினைவினை இழந்துவிட வாய்ப்புள்ளதாகவும் அதனால் இந்த இறுதி நாட்களை தன் குடும்பத்தாருடன் செலவிட விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது. அவர்களிடம் இறுதியாக, ‘தன் தாயின் மடியில் மரணிக்க விரும்புவதாக’ அந்த கைதி கோரியுள்ளார். இந்த கோரிக்கையை கேட்ட நீதிபதிகள் வரும் ஜூன் 5-ம் தேதிக்குள் இதற்கு பதில் கூறுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.