ஐபிஎல் போட்டிக்கு ‘ஒட்டக பேட்’ எடுத்துட்டு வந்துருங்க..! பிரபல வீரரை கலாய்த்த ஹைதராபாத் அணி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Dec 31, 2019 11:36 AM
ஐபிஎல் போட்டிக்கு வரும்போது ஒட்டக பேட்டுடன் வந்துவிடுங்கள் என ரஷித் கானை சன்ரைசர்ஸ் அணி நகைச்சுவையாக கிண்டல் அடித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், கடந்த சில வருடங்களாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் டி20 போட்டிகளில் 240 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். ஐபிஎல் தொடர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பாக விளையாடி வருகிறார். பந்து வீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் ரஷித் கான் அசத்தி வருகிறார்.
இந்த நிலையில் பிபிஎல் தொடரில் விளையாடி வரும் ரஷித் கான் புதுவிதமான பேட்டை வைத்து விளையாடுகிறார். பேட்டின் பின்புறத்தில் முதுகு போல வளைந்து உள்ளது. இதனை கிரிக்கெட் ரசிகர்கள் ஒட்டக பேட் என அழைக்கின்றனர். இதுகுறித்து ‘கிரிக்கெட்.காம்’ என்ற கிரிக்கெட் தொடர்பான ட்விட்டர் பக்கம் இதனை ‘ஒட்டக பேட்’ என விளையாட்டாக குறிப்பிட்டிருந்தது. அதற்கு பதிலளித்த சன்ரைசர்ஸ் அணி, 2020 ஐபிஎல் போட்டிக்கும் இந்த பேட்டுடன் வந்துவிடுங்கள் என விளையாட்டாக பதிவிட்டுள்ளது.
Carry it along for IPL 2020, @rashidkhan_19! 😎 https://t.co/qP0WVo1S8v
— SunRisers Hyderabad (@SunRisers) December 29, 2019
